×

நைஜீரிய ஆயுதக் குழுக்களின் தாக்குதலால் பழங்குடியினர் 160 பேர் சுட்டுக் கொலை: 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்


அபுஜா: நைஜீரிய நாட்டின் ஆயுதக் குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தியதால் 160 பழங்குடியின மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நைஜீரியா நாட்டின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் வசிக்கும் முஸ்லீம் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், கிறிஸ்துவ விவசாயிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது. கடந்த மே மாதம் முதல் இங்கு வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கால்நடை மேய்ப்பவர்கள் ஆயுதங்களை கொண்டு மக்களை தாக்குவதால், நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வீடுகளில் புகுந்து, அவர்களை ஆயுதக் குழுக்குள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. ஆனால் திங்கள்கிழமையும் படுகொலை சம்பவங்கள் தொடர்ந்ததால், இறப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. இன்றைய நிலையில் 160 பேர் கொல்லப்பட்டதாகவும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post நைஜீரிய ஆயுதக் குழுக்களின் தாக்குதலால் பழங்குடியினர் 160 பேர் சுட்டுக் கொலை: 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Abuja ,Dinakaran ,
× RELATED சிறைக்குள் வெள்ளம் 100 கைதிகள் தப்பி ஓட்டம்