×

கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த ஒடிசா எம்எல்ஏ ‘அட்மிட்’


புவனேஷ்வர்: ஒடிசாவில் கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த எம்எல்ஏ பூபேந்தர் சிங் என்பவர், பேட்டிங் செய்த போது கீழே விழுந்தார். ஒடிசா மாநிலம் காலஹண்டி மாவட்டம் நர்லா தொகுதி பிஜு ஜனதா தளம் கட்சி எம்எல்ஏ பூபேந்தர் சிங் (72), தனது தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடந்தது. முன்னதாக அவர் கிரிக்கெட் மட்டையை பிடித்து தொடரை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடினார். பூபேந்திர சிங் பேட்டிங் செய்தபோது எதிர்பாராத விதமாக பந்து அவரின் தலையை தாக்கியது. இதில், படுகாயமடைந்த பூபேந்திர சிங் மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். இதையடுத்து பூபேந்திர சிங்கை மீட்ட உதவியாளர்கள், அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த ஒடிசா எம்எல்ஏ ‘அட்மிட்’ appeared first on Dinakaran.

Tags : Odisha MLA ,Bhubaneswar ,MLA ,Bhupender Singh ,Odisha ,Dinakaran ,
× RELATED பெண் தூக்கிட்டு தற்கொலை