×

தூத்துக்குடியில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடியில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளித்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் ஆய்வு செய்த அமைச்சர் சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசியில் ஏற்பட்ட மழை பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி மனு அளித்துள்ளனர். வேளாண் கடன்கள் அனைத்துணையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடியில் மழை,வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த டிச.17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த அதிகனமழையின் காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

கனமழை வெள்ளத்தில் அம்மாவட்டத்தில் உள்ள பல்வேறு குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மாலா சீதாராமன் தூத்துக்குடியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இந்த ஆய்வுக் கூட்டத்தின்போது, தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post தூத்துக்குடியில் அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Finance ,Minister ,Nirmala Sitharaman ,All Farmers Association Coordination Committee ,Tuticorin ,Thoothukudi ,All Farmers Association ,Union ,Finance ,Coordinating Committee ,Union Finance Minister ,Dinakaran ,
× RELATED மோடி அரசு நீண்டகாலம் நீடிக்காது: நிர்மலா சீதாராமன் கணவர் கணிப்பு