×

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சமாஜ்வாதி பிரமுகர் பிரசாத் மவுரியா: இந்து என்பது மதம் இல்லை, ஏமாற்றும் வழி என்று விமர்சனம்!!

டெல்லி: இந்து என்பது மதம் இல்லை. அது ஒரு ஏமாற்றும் வழி என்று கருத்து வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா. ஒரு தனியார் செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள காணொளி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை மேற்கோள் காட்டி சுவாமி பிரசாத் மவுரியா பேசி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. கூட்டம் ஒன்றிய பேசிய பிரசாத் மவுரியா;

இந்து என்பது மதம் இல்லை, மாறாக அது ஒரு வாழ்க்கை முறை மட்டுமே என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இரண்டு முறை கூறியிருப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியும் இந்து என்ற ஒரு மதம் இல்லை என கூறியிருப்பதாகவும் மவுரிய குறிப்பிட்டார். அவர்கள் அப்படி பேசியபோது கண்டுகொள்ளாத இந்து அமைப்புகள் தன்னை போன்றவர்கள் பேசினால் மட்டும் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டு விட்டது என்று குற்றம் சாட்டுவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சுவாமி பிரசாத் மவுரியாவின் கருத்துக்கு இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரவாணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரசாத் மவுரியா நஞ்சினை கக்குவதாக கூறியுள்ள சக்கரவாணி அவர் மீது புல்டோசர் இயக்க வேண்டிய நேரம் இது என்று விமர்சித்துள்ளார். பிரசாத் மவுரியா இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர் போல பேசுவதாகவும், இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்கரவாணி குற்றம் சாட்டியுள்ளார்.

The post மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சமாஜ்வாதி பிரமுகர் பிரசாத் மவுரியா: இந்து என்பது மதம் இல்லை, ஏமாற்றும் வழி என்று விமர்சனம்!! appeared first on Dinakaran.

Tags : Samajwadi ,Prasad Maurya ,Hinduism ,Delhi ,
× RELATED முலாயமின் குடும்பத்தினர் மீது பாஜவுக்கு அச்சம்: சிவபால் சிங் பேட்டி