×

நான் சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்றுவிடுவார்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

கோவை: நான் சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்றுவிடுவார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். கோவை சூலூர் பகுதியில் இன்று காலை தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் முக்கிய ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற தேர்தல், பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. நிகழ்ச்சியில் பேசிய அவர்; எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோற்றது.

அதிமுக தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள். உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பதற்காக மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து அதிமுகவை காப்பாற்றுவதே என் எண்ணம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் வாபஸ் பெற்றோம். அதிகார போதை, பணத் திமிரால் இபிஎஸ் உள்ளிட்டோர் அதிக இடர்பாடுகளை கொடுத்தனர்.

ஆட்சியில் இருந்தபோது கோப்புகள் என்னிடம் வந்துதான் செல்லும்; அந்த ரகசியங்களை அவிழ்த்துவிட்டால், எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும். தவறான வழியில் சென்றபோது எச்சரித்தேன்; ஈபிஎஸ் கேட்காததால் ஆட்சி போனது, அடுத்தடுத்து தேர்தல்களிலும் தோல்வி. 10 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியை மோடி தந்துள்ளார். அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியா சுபிட்சமாக, நன்றாக இருக்கும் என்றும் கூறினார்.

The post நான் சில விஷயங்களை கூறினால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்கு சென்றுவிடுவார்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Eadapadi Palanisamy Dikar ,O. Paneerselvam ,KOWAI ,EDAPPADI PALANISAMI DIGARH ,O. Paneer Selvam ,Edappadi Palanisami Tigar ,O. ,Paneer ,Selvam ,Dinakaran ,
× RELATED விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஈஷா...