×

நிச்சயதார்த்தத்தின் போது நடந்த விருந்தில் ஆட்டுக்கறியில் எலும்பு இல்லாததால் திருமணம் ரத்து: தெலங்கானாவில் விநோத திருப்பம்


ஐதராபாத்: தெலங்கானாவில் நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், அசைவ உணவில் ஆட்டிறைச்சி எலும்பு பரிமாறவில்லை எனக்கூறி மணமகன் குடும்பத்தினர் கோபமடைந்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது. தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த ஜக்தியால் என்பவருக்கு, கடந்த நவம்பர் மாதம் மணமகளின் வீட்டில் நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது உறவினர்களுக்கு அசைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது. மணமகளின் குடும்பத்தினர், மணமகனின் உறவினர்கள் உள்ளிட்ட விருந்தினர்களுக்கு அசைவ உணவு வகைகளை பரிமாறினர். அப்போது ஆட்டிறைச்சியின் எலும்பு இறைச்சி வழங்கப்படவில்லை என்று சிலர் விருந்தினர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால் மணமகளின் குடும்பத்தினருக்கும், மணமகனின் குடும்பத்தினரும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் இரு தரப்பினரையும் சமாதனம் நடத்த முயன்றனர். இருந்தும் மணமகன் குடும்பத்தினர் சமாதானம் அடையவில்லை. ஆட்டிறைச்சி எலும்பை வேண்டுமென்றே தங்களுக்கு பரிமாறவில்லை எனக்கூறி வாக்குவாதம் செய்தனர். இறுதியாக திருமண நிச்சயதார்த்தம் பாதியில் முடிந்தது. தொடர்ந்து இருதரப்பு பெரியவர்கள் பலமுறை பேசியும், வாக்குவாதம் மானப் பிரச்னையாக உருவெடுத்ததால் தற்போது திருமணத்தையும் ரத்து செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிச்சயதார்த்தத்தின் போது நடந்த விருந்தில் ஆட்டுக்கறியில் எலும்பு இல்லாததால் திருமணம் ரத்து: தெலங்கானாவில் விநோத திருப்பம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Hyderabad ,
× RELATED தெலங்கானாவில் நேற்றிரவு அரசு...