×

தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை


தூத்துக்குடி: தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தூத்துக்குடியில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு, இன்று பிற்பகல் 12.30 மணியளவில் தூத்துக்குடி விமானம் நிலையத்துக்கு வந்தார். அவரை தூத்துக்குடி கலெக்டர் லட்சுமிபதி, நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து தூத்துக்குடி குறிஞ்சி நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். இதையடுத்து கோரம்பள்ளம் குளம் உடைப்பு பகுதியையும், அந்தோணியார்புரம் சாலை உடைப்பு பகுதியையும் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் ஏற்கனவே ஒன்றிய குழுவினர் வெள்ளம் வடிவதற்கு முன்பே நேரில் ஆய்வு செய்து ஒன்றிய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.21 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் கோரியுள்ளது. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு செய்த பிறகு ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு வழங்கும் நிவாரண நிதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தூத்துக்குடியில் வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...