×

காஞ்சிபுரத்தில் இன்று பயங்கரம்; பிரபல ரவுடி வெட்டிக்கொலை: காரில் தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இன்று காலை பிரபல ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திஉ உள்ளது. காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (37). பிரபல ரவுடியான இவர் மீது காஞ்சிபுரம் காவல்நிலையம், விஷ்ணு காஞ்சி காவல்நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ளது. காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த தேமுதிக பிரமுகர் செந்தில் கொலை வழக்கில் பிரபாகரன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். இந்தநிலையில், இன்று காலை 11 மணி அளவில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் பிரபாகரன் நடந்துசென்றபோது காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் இறங்கிவந்து பிரபாகரனை சுற்றிவளைத்தனர்.

பிரச்னை நடக்கப்ேபாகிறது என்பதை உணர்ந்துகொண்ட பிரபாகரன், அவர்களிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்றார். ஆனால் அந்த கும்பல் விரட்டி சென்று பிரபாகரனை சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்தபின்னர் கும்பல் காரில் தப்பிச் சென்றுவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சிவகாஞ்சி போலீசார் விரைந்துவந்து பிரபாகரன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து பிரபாகரனை கொலை செய்த கும்பலை தேடி போலீசார் வருகின்றனர். இந்த சம்பவத்தால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

The post காஞ்சிபுரத்தில் இன்று பயங்கரம்; பிரபல ரவுடி வெட்டிக்கொலை: காரில் தப்பிய கும்பலுக்கு வலைவீச்சு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram Pallavarmedu ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...