×

கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

*திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

திருப்பதி : திருப்பதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு திருப்பதி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் விடிய விடிய சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். உலகம் முழுவதும் இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

அதன்படி நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும் களைக்கட்டியது. தமிழ்நாட்டில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. அதன்படி, திருப்பதி ஷெகினா தேவாலயத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் சிறப்பு பிரார்த்தனை கூட்டங்கள் நடந்தன. தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில் இயேசு பிறந்ததை பாதிரியார் அருள்அரசு அறிவித்தார்.

தொடர்ந்து குழந்தை இயேசுவின் சிலையை பிரார்த்தனையில் கலந்து கொண்டவர்கள் பார்த்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி ஆராதனை நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஷெகினா தேவாலயத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரததுடன் வண்ண வண்ண மின்விளக்கொளியில் ஜொலித்தது.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.சித்தூர்: சித்தூர் பிஷப் சர்ச்சில் ஜோக் பாஸ்டர் தலைமையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடந்து, கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அப்போது ஜோக் பாஸ்டர் கூறியதாவது: இயேசு கிறிஸ்து பிறந்த சில நிமிடங்களிலேயே சிரித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அது மட்டுமல்லாமல் சிறு வயதில் இருந்தே மக்களுக்கு பல்வேறு போதனைகளை எடுத்துக் கூறினார்.

தற்போது இயேசு கிறிஸ்து அறிவித்த போதனைகளை நாம் அனைவரும் கடைப்பிடித்து வருகிறோம். ஆகவே இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு கிறிஸ்துவ மக்கள் அனைவரும் புத்தாடைகள் அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். இதே போல் சித்தூர் மாநகரத்தில் உள்ள சிஎஸ்ஐ சர்ச், பிஷப் காட்டன் சர்ச் உள்பட அனைத்து தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

The post கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை appeared first on Dinakaran.

Tags : Christmas festival ,Kolagalam ,Tirupati ,Christmas ,
× RELATED காவல்துறை தொழில்நுட்ப வல்லுனர்களுடன்...