×

தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் “தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது; “99-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர், எளிமையின் அடையாளமான தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

ஆங்கிலேய அடக்குமுறை ஆட்சியை நம் மண்ணில் இருந்து அகற்றப் போராடிய ஐயா நல்லகண்ணு, நமக்கெல்லாம் ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்து என்றும் வழிநடத்திட வேண்டும்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post தகைசால் தமிழர், தோழர் நல்லகண்ணு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Thakaisal ,Comrade ,Nallakanu Ballanda ,Mu. K. Stalin ,Chennai ,Communist ,Nalalkanu ,Nallakanu Ballandu ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் 956 புதிய...