×

நியூட்ரிலைட் ஆல் பிளான்ட் புரோட்டின் பவுடரைக் கொண்டு உங்கள் உடலுக்கு ஆற்றல் வழங்குங்கள்

உடல்பயிற்சி செய்வது, தினமும் போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிப்பது, நம் உணவில் கூடுதல் புரதம் சேர்த்துக்கொள்வது போன்றவை எல்லாம் எவ்வளவு முக்கியமானது என்று நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம். ஆனால் நாம் சரியான வாழ்க்கைமுறை மாற்றங்களைச் செய்வதில்லை. இதனால்தான் அதற்குப் பின்னால் இருக்கும் ‘ஏன்’ என்பது பற்றி நாம் ஆர்வம் கொள்வதில்லை. உதாரணமாக, புரதம் ஏன் நமக்கு முக்கியமானது? அது உங்களுக்கு என்ன செய்கிறது? மனித உடலின் ஒவ்வொரு செல்லிலும் புரதம் இருப்பது உங்களுக்குத் தெரியுமா? அது நம் முடியில், தோலில், நம் உடலின் எல்லா பகுதிகளிலும், திசுக்களிலும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாம் அடிக்கடி உடல் பயிற்சி கூடங்களில் கேட்பது போல் அது வெறும் தசைக் கட்டுக்கு மட்டுமே உதவுவதில்லை. இன்னும் ஏராளமாகச் செய்கிறது!
புரத உண்மைகளை நெருங்கிப் பார்க்கவேண்டும்
அமினோ அமிலங்களால் உருவாக்கப்பட்ட பெரிய மூலக்கூறுகளே புரதங்கள். அமினோ அமிலங்கள் உயிரின் கட்டுமானத் தொகுதிகள். செல்களைப் பழுதுபார்க்கவும், புதியவைகளை உருவாக்கவும் மட்டுமல்லாமல் அனைத்து வயது மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உதவுவது. பல வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றில் நமது உடலால் உருவாக்க முடியாத ஒன்பது முக்கிய அமினோ அமிலங்கள் உள்ளன. இவற்றை நாம் உணவில் இருந்தும் கூடுதல் உணவில் இருந்தும் பெறுகிறோம். ஆகவே, நாம் அதிக அளவில் புரதத்தை உட்கொள்வதுடன் உயர் தரமிக்க புரதத்தின் ஆதாரங்களையும் உண்பது முக்கியம். உதாரணமாக Nutrilite All Plant Protein Powder. இதில் இருக்கும் புரதத்தில் PDCAAS = 1.0 உள்ளது. செரிமானத்தைப் பொறுத்தவரையில் இது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மேலும் இது 9 வகை இன்றியமையா அமினோ அமிலங்களையும் வழங்குகிறது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிப் பேரவை (ICMR), 2020, தினமும் வயது வந்தவர்கள் ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் குறைந்தபட்சம் 0.83 கிராம் புரதத்தைப் பெறவேண்டும் என்று பரிந்துரைக்கிறது. ஆனால் பெரும்பாலும் நம் உணவில் இந்தத் தேவை பூர்த்தி செய்யப்படுவதில்லை.

 

புரதம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம். நமது தினசரி உணவில் பரிந்துரைக்கப்பட்ட அளவுக்குப் புரதம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. புரத ஆதாரங்கள் நம் ஆரோக்கியத்தில் பெரிய வித்தியாசத்தை உருவாக்குகின்றன என்று இன்று கிடைக்கும் சான்றுகள் கூறுகின்றன. 20 வெவ்வேறு வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. நம் உடலுக்கு அவற்றில் ஒன்பது இன்றியமையாதவை ஆகும். உணவின் மூலம் இந்த அனைத்து இன்றியமையாத அமினோ அமிலங்களுடன் எவ்வாறு ஒருவரால் உயர் தர புரதத்தைப் பெற முடியும்? அவை சரியான ஆதாரத்தில் இருந்து கிடைக்கின்றனவா?

ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுத் துறையில் முன்னணியில் இருக்கும் ஒரு நிறுவனமான ஆம்வே இந்தியா, வைட்டமின்கள் மற்றும் கூடுதல் உணவு விற்பனையில் நம்பர் 1 ஆக இருக்கும் தன் முக்கிய பிராண்டான நியூட்ரிலைட் மூலம் உயர் தரமான கூடுதல் உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. இது இயற்கையில் சிறந்ததையும் அறிவியலில் சிறந்ததையும் ஒன்றிணைத்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒன்பது தசாப்த நீண்ட பாரம்பரியமும் உள்ளது. கூடுதல் உணவு வகைகளைப் பொறுத்தவரையில் நியூட்ரிலைட் தாவர அடிப்படை அணுகுமுறையில் தன்னிகரற்றதாக விளங்குகிறது. வாடிக்கையாளரின் புரதத் தேவைகளை நிவிர்த்திசெய்யும் பொருட்டு நியூட்ரிலைட் ஆல் பிளான்ட் புரோட்டின் பவுடரை நியூட்ரிலைட் வழங்குகிறது. இது உணவில் இருக்கும் புரதக் குறைபாட்டை இட்டுநிரப்புகிறது. 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது சிறந்தது ஆகும்.

தாவர அடிப்படையிலான புரத ஆதாரங்களை ஏன் சார்ந்திருக்க வேண்டும்?
இறைச்சி, பால்பொருள், முட்டை போன்ற விலங்குப் புரத ஆதாரங்கள் “முழுமையான புரதங்கள்” என்று கருதப்படுகின்றன. இருந்தாலும், தாவரப் புரதத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆரோக்கியம் (லேக்டோஸ் செரிக்காமல்போதல்), நல்வாழ்வு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற காரணிகளால் காய்கறி உணவை மக்கள் விரும்புவதால் தாவர அடிப்படை உணவுத் தொழில் துறையை நோக்கி பேரளவில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.. தாவர அடிப்படையிலான உணவுகள் உடல் நிறை அட்டவணையையும், இரத்த அழுத்தத்தையும், HbA1C ஐயும், கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைக்கின்றன என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அவை நீடித்த நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் மருந்துகளின் எண்ணிக்கையையும் இரத்த ஓட்டக் குறை இதய நோய்களால் ஏற்படும் மரண எண்ணிக்கையையும் குறைக்கலாம். மேலும், பொதுவான தாவரப் புரதத்தில், கொழுப்பு குறைவாகவும், ஆன்டியாக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ளன. கொலஸ்ட்ரால் இல்லை. இதனால் இது இதய ஆரோக்கியத்துக்குச் சிறந்தது. இதில் அதிக அளவு நார்ச்சத்தும், இரும்பு, மக்னீஷியம் போன்ற தாதுக்களும் பைட்டோநியூட்ரிண்டுகளும் உள்ளன.


சந்தையில் கிடைக்கும் பலவற்றில் ஒரு தேர்வை செய்ய வேண்டுமானால் நீங்கள் ஆம்வேயின் நியூட்ரிலைட் பிளான்ட் புரோட்டின் பவுடரை தேர்வுசெய்யலாம். இது ஒரு 100% தாவர அடிப்படையிலான புரோட்டின் பவுடர் ஆகும். சோயா, கோதுமை மற்றும் மஞ்சள் பட்டாணி ஆகிய மூன்று ஆதாரங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. தங்கள் உணவில் தாவரப் புரதத்தைச் சேர்க்க விரும்புபவர்களுக்கு மிகச்சிறந்தது. PDCASS=1.0 கொண்ட தரமான புரதத்தைக் கொண்டிருப்பதால் நியூட்ரிலைட் ஆல் பிளான்ட் புரோட்டின் பவுடரில் இருக்கும் மூலப்பொருட்கள் நம் உடலால் தயாரிக்க முடியாத ஆனால் வெளியில் இருந்து பெற வேண்டிய ஒன்பது அமினோ அமிலங்களை அளிக்கின்றன. கூடுதலாக, இதில் அதிக அளவில் புரதம் உள்ளது – 10 கிராம் செர்விங்கில் 8 கிராம் புரதம் – சர்க்கரை சேர்க்கப்படவில்லை. இதனால் இது ஊட்டச்சத்து குறைபாட்டை நிவிர்த்தி செய்யும் முழுமையான புரதக் கூடுதல் உணவாக விளங்குகிறது. விதையில் இருந்து ஒரு கூடுதல் உணவாக இது உருவாகும் துல்லியமான செயல்முறையில் ஒன்பது படிகள் அடங்கி உள்ளன. இதன் தாவர மூலப்பொருட்கள் சான்றளிக்கப்பட்ட ஆம்வேயின் 6000 ஏக்கர் சொந்த இயற்கைப் பண்ணைகளிலும் பங்குதாரர் பண்ணைகளிலும் இருந்து கிடைக்கின்றன. கச்சாப் பொருட்கள் பேக் செய்யப்படும் கட்டம் வரை கடுமையான தரக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் மூலம் தூய்மை, பாதுகாப்பு மற்றும் தயாரிப்பின் செயல்திறன் உறுதிசெய்யப்படுகிறது.
அடிப்படை என்னவென்றால் உங்கள் உடலில் புரதம் பல பங்குகளை வகிக்கிறது. செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சி, பராமரிப்பு, பழுதுபார்ப்புக்கு இது ஒரு முக்கியமான மேக்ரோநியூட்டிரென்ட் ஆகும். ஆகவே மேலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவிர்த்திசெய்ய வழக்கமான உணவுடன் இன்றே Amway Nutrilite’s All Plant Protein Powder ஐ உட்கொண்டு ஓர் ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கையை நோக்கி நகருங்கள்.

The post நியூட்ரிலைட் ஆல் பிளான்ட் புரோட்டின் பவுடரைக் கொண்டு உங்கள் உடலுக்கு ஆற்றல் வழங்குங்கள் appeared first on Dinakaran.

Tags : Energize ,Nutrilite ,Dinakaran ,
× RELATED எந்தக் கிரகம் நல்லது செய்யும்?