×

தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் வெற்றிலைக் கொடிகள் சேதம்: 90% வெற்றிலை கொடிகள் அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை

கன்னியாகுமாரி: தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திருச்செந்தூர் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் வெற்றிலை கொடிகள் அழுகி வருகின்றனர். இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்செந்தூர் அருகே மேலத்தூர், ஆத்தூர், வெள்ளகோவில், கீரனூர், குமரிக்காடு, ஏரல், சேந்தமங்கலம் போன்ற கிராமங்களை சேர்ந்த சுமார் 10,000 குடும்பங்கள் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கூட்டு விவசாய முறையில் வெற்றிலைகளை பயிரிட்டு வருகின்றனர். இங்கு விளையும் வெற்றிலைகள் ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தென் மாவட்டங்களை, சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் வெற்றிலை கொடிக் கால்களை வெள்ளநீர் சூழ்ந்து கொண்டதால் 90% கொடிகள் அழுகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பெரும் மழை பேரிடரால் வெற்றிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு ஈடுகட்டும் விதமாக நிவாரணத் தொகை புதிய வெற்றிலை கொடிகளை வாங்குவதற்கான வட்டியில்லா மானியத்தை போன்றவற்றை வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தாமிரபரணி வெள்ளப்பெருக்கால் வெற்றிலைக் கொடிகள் சேதம்: 90% வெற்றிலை கொடிகள் அழுகிவிட்டதாக விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Tamiraparani ,Kanyakumari ,Attur ,Tiruchendur ,Tamiraparani river ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...