×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது. நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் சாமிகள் தனித்தனித் தேர்களில் வலம் வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா நாளை மதியம் நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று (26ம் தேதி) தேரோட்டம், நாளை (27ம் தேதி) தரிசனம் நடக்கிறது. உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று ஆருத்ரா தரிசன விழா தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நடராஜர் ,சிவகாமசுந்தரி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும், தனித்தனி தேர்களில் வீதிகளில் வலம் வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் குவிந்துள்ளனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா தேரோட்டத்தை முன்னிட்டு அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் மற்றும் தரிசன விழா நடைபெறும் 26ம் தேதி மற்றும் 27 தேதிகளில், நகரின் நான்கு பிரதான வீதிகளில் பஸ், லாரி, கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் நான்கு வீதிகளில் எவ்வித வாகனங்களையும் நிறுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவில் தேரோட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Arutra Darisana Festival ,Chidambaram Natarajar Temple ,Natarajar ,Sivakamasundari ,Vinayagar ,Murugar ,Chandikeswarar Samigal ,
× RELATED கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு...