×

திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்ட வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது: திருப்பதி தேவஸ்தானம்

திருமலை: திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்ட வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் பக்தர்கள் ஜனவரி 1ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட உள்ளனர். இலவச தரிசனத்திற்காக ஒரு நாளைக்கு 43 ஆயிரம் டோக்கன்கள் என 10 நாட்களுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இலவச சர்வ தரிசன டோக்கன்கள் கடந்த டிச22ம் தேதி மதியம் 2 மணி முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்தது. இதனால் இந்த டோக்கன்களை பெற ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

பக்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தேதிக்கு ஒரு நாள் முன்னதாக திருமலைக்கு வர வேண்டும். தரிசன டிக்கெட்டுகள் இல்லாத பக்தர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி இல்லை. இருப்பினும் திருமலைக்கு அனுமதிக்கப்படும் கோயில் வெளியே கோபுர தரிசனம், மொட்டையடிப்பது, திருமலையில் வராக சுவாமி உள்ளிட்ட இதர சன்னதிகளில் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்ட வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்ததால் ஜன.1 வரை திருப்பதி கோயிலுக்கு வர வேண்டாம் எனவும் இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் ஸ்ரீவாரி தரிசனம் செய்ய முடியாது எனவும் இலவச தரிசன டோக்கன்கள் ஜனவரி 2-ம் தேதி முதல் வழங்கப்படும் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

The post திருப்பதியில் 9 மையங்களில் வழங்கப்பட்ட வந்த இலவச சொர்க்க வாசல் தரிசன டோக்கன் விநியோகம் முடிந்தது: திருப்பதி தேவஸ்தானம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Thirumalai ,Turupati ,Tirupathi ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து...