×

மதுரையில் ஜன.7ல் எஸ்டிபிஐ மாநாடு

சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை’- மாநாடு மதுரையில் ஜனவரி 7ம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்துகொள்ள வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் நெல்லை முபாரக் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் அவர், சென்னையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து மாநாட்டுக்கான அழைப்பிதழை வழங்கினார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்டிபிஐ மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர் நஸ்ருதீன், செயலாளர் ஏ.கே.கரீம் உடன் இருந்தனர்.

The post மதுரையில் ஜன.7ல் எஸ்டிபிஐ மாநாடு appeared first on Dinakaran.

Tags : STPI ,Madurai ,Chennai ,Overcoming Secularism' ,STBI ,Dinakaran ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்