×

கடன் தள்ளுபடி வேண்டும் என்பதற்காக எப்போது வறட்சிகாலம் வரும் என்று எதிர்ப்பார்க்கும் விவசாயிகள்: கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெலகாவி: ‘‘வறட்சி காலத்தில் விவசாயிகள் இயற்கையாகவே கடன் தள்ளுபடியை எதிர்பார்க்கிறார்கள். எப்பொழுது வறட்சி காலம் வரும் என காத்திருக்கிறார்கள்’’ என கர்நாடக அமைச்சர் சிவானந்த பாட்டீல் விவசாயிகள் குறித்து சர்ச்சையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவி மாவட்டம் அத்தானி தாலுகா சுட்டட்டி கிராமத்தில் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 75-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சிவானந்த பாட்டீல் கலந்து கொண்டார். அப்போது அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அங்கு அவர் கூறியதாவது: வறட்சி காலங்களில், விவசாயிகள் இயற்கையாகவே கடன் தள்ளுபடியை எதிர்பார்க்கிறார்கள், முந்தைய அரசுகளும் கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இருப்பினும், தற்போதைய அரசு சிக்கலில் இருக்கும்போது, அது கடினமாக இருக்கும். இதை மனதில் வைத்து விவசாயிகள் பயிர்களை வளர்க்க வேண்டும். விவசாயிகள் எப்பொழுது வறட்சி காலம் வரும் என காத்திக்கிறார்கள். அப்போதுதான் கடன் தள்ளுபடி ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள் என்றார். அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

The post கடன் தள்ளுபடி வேண்டும் என்பதற்காக எப்போது வறட்சிகாலம் வரும் என்று எதிர்ப்பார்க்கும் விவசாயிகள்: கர்நாடக அமைச்சர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Belagavi ,Dinakaran ,
× RELATED நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக ராகுல் பேசாதது ஏன்? பிரதமர் மோடி தாக்கு