×

தலிபான் ஆட்சியாளர்கள் கெடுபிடியால் ஆப்கானில் ஆறாம் வகுப்புடன் முடிந்துபோகும் பெண் கல்வி: எங்கள் கனவு கலைந்து விட்டது; மாணவிகள் கண்ணீர் பேட்டி

காபூல்: ஆப்கானிஸ்தானில் 6ம் வகுப்பு முடித்த மாணவிகள் தங்கள் கனவுகள் கலைந்து விட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2021ம் ஆண்டு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வௌியேறின. இதையடுத்து தாலிபன்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றினர். இதையடுத்து தாலிபன் அரசு மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி முதலில் பெண்கள் பல்கலை கழகங்களில் சேர தடை விதித்த தாலிபான் அரசு பின்னர், 6ம் வகுப்புக்கு மேல் பெண்கள் படிக்க தடை விதித்தது. ஆப்கனில் இந்த டிசம்பர் மாதத்துடன் பள்ளி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டு விடுமுறை விடப்பட உள்ளது. இந்நிலையில் காபூலில் உள்ள பிபி ரசா பள்ளியில் 6ம் வகுப்பை முடித்த மாணவிகள் தாங்கள் இனி வகுப்பறைகளுக்கே செல்ல முடியாது என வேதனை தெரிவித்துள்ளனர். மாணவிகள் கூறும்போது, “நாங்கள் 6ம் வகு ப்பை முடித்து 7ம் வகுப்பு போக வேண்டும். ஆனால் இனி நாங்கள் வகுப்பறைகளுக்கே போக முடியாது. தோழிகளை பார்க்க முடியாது. எங்கள் கனவுகள் எல்லாம் கலைந்து விட்டது. எங்களால் சொந்த காலில் நிற்க முடியாது” என்று கண்ணீருடன் வேதனையை வௌிப்படுத்தி உள்ளனர்.

The post தலிபான் ஆட்சியாளர்கள் கெடுபிடியால் ஆப்கானில் ஆறாம் வகுப்புடன் முடிந்துபோகும் பெண் கல்வி: எங்கள் கனவு கலைந்து விட்டது; மாணவிகள் கண்ணீர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Taliban ,Kabul ,
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...