×

தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்பு பாக். நாடாளுமன்ற தேர்தலில் போட்டி

லாகூர்: மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 250க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத் இதில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. பாகிஸ்தானில் தீவிரவாத செயலுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் சயீத் கடந்த 2019ம் ஆண்டு கைது செய்யப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹபீஸ் சயீத் ஆரம்பித்த பாகிஸ்தான் மர்காசி முஸ்லிம் லீக் என்ற அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றி, 2024 பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. இந்த கட்சிக்கு நாற்காலி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பிஎம்எம்எல் தலைவர் காலித் மசூத் சிந்து வௌியிட்டுள்ள விடியோ பதிவில், “தேசிய, மாகாண தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில் கட்சி போட்டியிடுகிறது. மக்களுக்கு சேவை செய்யவே நாங்கள் அரசியலுக்கு வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

The post தீவிரவாதி ஹபீஸ் சயீத்தின் தீவிரவாத அமைப்பு பாக். நாடாளுமன்ற தேர்தலில் போட்டி appeared first on Dinakaran.

Tags : Habeez Saeed ,Bagh ,Lahore ,Mumbai ,Abhiz Saeed ,Dinakaran ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.