×

கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி போலீசில் புகார்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்த்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக தீட்சிதர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது. அரசு உத்தரவை மீறிய தீட்சித்தர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் புகார் தெரிவித்துள்ளார். ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு இன்று முதல் 28-ம் தேதி வரை பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கியது. அதற்கு தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தீட்சிதர்கள் மீது போலீசில் புகார் தெரிவிக்கபட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தற்போது ஆருத்ரா தரிசன விழா நடைபெற்று வருகிறது. விழாவின் உச்ச நிகழ்வாக நாளை தேரோட்டமும், நாளை மறுநாள் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது, கடந்த ஆணி மாதம் நடைபெற்ற திருமஞ்சன திருவிழாவின் போது கோயிலில் பக்த்தர்கள் கனகசபை மீது ஏற திட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட்டு, இந்து சமய அறநிலையத்துறையினர் அதிரடியாக பதாகைகளை அகற்றினர்.

அதுபோன்ற சம்பவம் மீண்டும் நடந்து விட கூடாது என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரும், ஏற்கனவே மனு அளிக்கபட்டிருந்தது. கோயிலில் போலீசார் உரிய பாதிக்கப்பு அளிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் கோரபட்டிருந்தது. அதே போல் தீட்சிதர்கள் தரப்பிலும் கடிதம் அளிக்கபட்டிருந்தது. அதில், கோயிலி பாரம்பரிய முறைபடி பூஜைகள் நடைபெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால் கோயிலில் பூஜைகள் நடைபெறும் போது போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறபட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று முழுவதும் கோயில் கனகசபை மீது பக்தர்களை தீட்சிதர்கள் அனுமதிக்கவில்லை. ஒரு சில பக்த்தர்கள் கோயிலுக்கு சாமி கும்பிட வரும்போது தீட்சிதர்கள் அவர்களை கனசபை மீது அனுமதிக்கமல் கனகசபை கதவை உள்பக்கமாக தாளிட்டிருந்தனர். பூஜைகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இது குறித்து பக்த்தர்கள் சிலர் இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் தெரிவிக்க, இந்து சமய அறநிலையத்துறையின் சிதம்பரம் தில்லை காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா என்பவர் இது குறித்து தீட்சிதர்களிடம் கேட்டுள்ளார்.

அப்போது, தீட்சிதர்கள் கோயிலில் கனசபை மீது ஏறுவது குறித்து நீதிமன்ற உத்தரவு இருகிறது. ஆனால் திருவிழா நேரத்தில் இதனை அனுமதிக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சிதம்பரம் தில்லை காளி கோயில் செயல் அலுவலர் சரண்யா சிதம்பரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசணையை மீறி சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருகோயில் கனசபை மீது ஏறி பொதுமக்கள் தரிசனம் செய்வதை தடை செய்யும் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

The post கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுப்பதாக சிதம்பரம் தீட்சிதர்கள் மீது இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities Department ,Chidambaram Dikshidar ,Kanakasabha ,Chidambaram ,Dikshitars ,Chidambaram Nataraja temple ,Hindu Religious ,
× RELATED தஞ்சை பெருவுடையார் கோயிலை சிதைக்கும்...