×

நவம்பர் 26ம் தேதி முதல் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஷாக்!!

மும்பை : நவம்பர் 26ம் தேதி முதல் பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது. அதன்படி, 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ. 79ல் இருந்து ரூ.99 ஆக உயர்கிறது. ரூ.99 திட்டத்தில் (முன்பு ரூ.79) ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கிறது  அதே போல், 28 நாட்களுக்கு 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149ல் இருந்து ரூ.179 ஆக  உயர்கிறது.28 நாட்களுக்கு  தினமும் 1ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219ல் இருந்து ரூ.265 ஆக  உயர்கிறது.28 நாட்களுக்கு  தினமும்  1.5ஜிபி மற்றும்  அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249ல் இருந்து ரூ.299 ஆக  உயர்கிறது.28 நாட்களுக்கு  தினமும் 2 ஜிபி மற்றும்  அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.298ல் இருந்து ரூ.359 ஆக அதிகரிக்கிறது. 56 நாட்களுக்கு தினமும்  1.5 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.479 ஆக அதிகரிக்கிறது. 56 நாட்களுக்கு தினமும் 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449ல் இருந்து ரூ.549 ஆக அதிகரிக்கிறது. 84 நாட்களுக்கு 6 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379ல் இருந்து ரூ.455 ஆக அதிகரிக்கிறது. 84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.598ல் இருந்து ரூ.719 ஆக அதிகரிக்கிறது.84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.698ல் இருந்து ரூ.839 ஆக அதிகரிக்கிறது. 365 நாட்களுக்கு 24 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1498ல் இருந்து ரூ.1799 ஆக அதிகரிக்கிறது. 365 நாட்களுக்கு தினமும் 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2498ல் இருந்து ரூ.2999 ஆக உயர்கிறது. …

The post நவம்பர் 26ம் தேதி முதல் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஷாக்!! appeared first on Dinakaran.

Tags : Airtel ,Mumbai ,Bharti Airtel ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!