×

கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு

 

திருப்பூர், டிச.25: கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. இதனை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு 1,297 பேரிடம் இருந்து விண்ணப்பம் பெறப்பட்டது.

இந்த விண்ணப்பத்தை பரிசீலித்ததில் 1094 தகுதியான விண்ணப்பதாரர்கள் உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு திருப்பூர் மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இதனை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். தேர்வு மையத்திற்கு வந்த கலெக்டர் கிறிஸ்துராஜ் அங்கு மேற்கொண்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

The post கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Collector ,Kristaraj ,
× RELATED திருப்பூர் மாவட்டத்தில் 534.60 மில்லி மீட்டர் மழைப்பதிவு