×

மூலை அனுமார் கோயிலில் சாஸ்தா ஹோமம்

தஞ்சாவூர்,டிச.25: தஞ்சாவூர் மேலவீதியில் உள்ள மூலை அனுமார் கோயிலில் சாஸ்தா ஹோமம் நடைபெற்றது.தஞ்சாவூர் மேலவீதியில் மூலை அனுமார் கோயில் உள்ளது. சபரிமலை ஐயப்பன் சூட்சும ரூபத்தில் இங்கு வாசம் செய்வதாக ஐதிகம். சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த புண்ணியத்தை இங்கும் பெறலாம்.சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்லும் முன் இத்தலத்தில் உள்ள ஐயப்பனை தரிசனம் செய்து செல்வது வழக்கமாகும்.இந்நிலையில் நேற்று காலை இக்கோயிலில் ஐயப்பன் சுவாமிக்கு சாஸ்தா ஹோமம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர்.

The post மூலை அனுமார் கோயிலில் சாஸ்தா ஹோமம் appeared first on Dinakaran.

Tags : Shasta ,Anumar temple ,Thanjavur ,Thanjavur Melayvedi ,Thanjavur.… ,
× RELATED பொறையாறு திருமுடி சாஸ்தா அய்யனார் கோயில் தேரோட்டம்