×

முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு

கந்தர்வகோட்டை, டிச.25: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வேலாடிப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முமீனா பேகம் என்ற மாணவி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான புதுக்கோட்டை மாவட்ட அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார். மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதை பாராட்டும் விதமாக வேலாடிப்பட்டி இல்லம் தேடிக் கல்வி மையத்தில் கந்தர்வகோட்டை இல்லம் தேடிக் கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி பாராட்டினார்.

மாற்றுத்திறன் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.மேலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது என்றும், இலவச பேருந்து ,ரயில் பயணம், மாதந்தோறும் உதவி தொகை,அரசு வேலை வாய்ப்புகளில்,கல்வி பயிலும் மாணவர்களுக்கு 4% சதவீதம் இட ஒதுக்கீடும், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மாதந்தோறும் பராமரிப்புக்கு உதவித்தொகை, காதொலி கருவி, உள்ளிட்ட பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்தையும் பெற்று வாழ்வில் உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் சிறப்பாசிரியர் பயிற்றுநர் அறிவழகன் கலந்து கொண்டு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அரசு வழங்கக்கூடிய கல்வி முறைகள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தன்னார்வலர் ஷீலா ராணி செய்திருந்தார்.

The post முதலிடம் பெற்ற மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kandarvakottai ,Momina ,Veladipatti Government High School ,Pudukottai ,District ,Kandarvakottai Union ,
× RELATED கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மண் பரிசோதனை செய்ய விவசாயிகள் அழைப்பு