×

ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்க சோதனை

 

கோவை, டிச. 25: கோவை மாவட்டத்தில் வாளையார், வேலந்தாவளம், சொக்கனூர், ஆனைகட்டி, மீனாட்சிபுரம், கோவிந்தபுரம், நடுப்புணி, கோபாலபுரம், கோபநாரி உட்பட 13 செக்போஸ்ட்கள் இருக்கிறது. மாவட்ட, மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலத்திற்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. கடத்தல் வாகனங்கள், ஹவாலா, போதை பொருட்கள், ரேசன் அரிசி, கஞ்சா, ஸ்பிரிட், தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் செக்போஸ்ட் வழியாக எல்லை தாண்டி செல்வதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்ட போலீசார் சோதனையில் தப்பி கடத்தல் வாகனங்கள் செல்வது வாடிக்கையாகிவிட்டது. சில இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வணிக வரித்துறையின் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறது. இந்த கேமராக்கள் அலுவலக வளாகத்தில் மட்டுமே இருப்பதால் முறையாக வாகனங்களை கண்காணிக்க முடிவதில்லை.

இதை தவிர்க்க, அனைத்து வாகனங்களையும் மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்க கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 13 செக்போஸ்ட்களில் இந்த கேமராக்கள் ெபாருத்தப்படும். மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு, ஆனைகட்டி ரோடு, வேலந்தாவளம் ரோடு உள்ளிட்ட முக்கிய மாவட்ட, மாநில எல்லை ரோட்டில் வாகனங்களின் விதிமுறை மீறல்களை கண்டறிய பல்வேறு இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவுள்ளது.

The post ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்க சோதனை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore district ,Valaiyar ,Velandavalam ,Sokkanoor ,Anaikatti ,Meenakshipuram ,Govindapuram ,Nadupuni ,Gopalapuram ,Gopanari ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்