×

திருச்செந்தூர் அருகே தேரிப்பகுதியில் செம்மணல் அள்ளிய ஜேசிபி சிறைபிடிப்பு

திருச்செந்தூர், டிச.25: திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலைகிணறு குன்று மேல் ஐயன் சாஸ்தா கோயில் அருகில் செம்மணல் எடுத்த ஜேசிபியை பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்செந்தூர் அருகே உள்ள கீழ நாலு மூலைக்கிணறு குன்று மேல் ஐயன் சாஸ்தா கோயில் சுற்றி தேரிப்பகுதி உள்ளது. இந்த செம்மணல் தேரி பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடைபெறுவது வழக்கம். இதனால் அங்கு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீரும் குறைந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் சுமார் 10 டிராக்டர்களில் செம்மணல் எடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் செம்மணல் எடுக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரத்தை சிறை பிடித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் அப்பகுதியில் இனி செம்மணல் எடுக்கப்படாது என தெரிவித்ததையடுத்து ஜேசிபி இயந்திரம் விடுவிக்கப்பட்டது.

The post திருச்செந்தூர் அருகே தேரிப்பகுதியில் செம்மணல் அள்ளிய ஜேசிபி சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : JCP ,Theri ,Tiruchendur ,Iyan Shasta temple ,Keezanalumolaikinaru hill ,Dinakaran ,
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி