×

1964ம் ஆண்டு புயலில் அழிந்த தனுஷ்கோடியில் அஞ்சலி

ராமேஸ்வரம்: 1964ம் ஆண்டு, டிசம்பர் 24ம் தேதி பாக் ஜலசந்தி கடலில் வீசிய பயங்கர புயலில் தனுஷ்கோடி நகரம் கடலில் மூழ்கியது. புயலடித்தபோது தனுஷ்கோடிக்கு ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகள், வீடுகளில் தூக்கத்தில் இருந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

புயலில் உயிரிழந்தவர்களின் நினைவாக இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் தனுஷ்கோடி கடலில் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். தனுஷ்கோடியில் மலரஞ்சலி செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உயிரிழந்தவர்கள் நினைவாக தனுஷ்கோடி கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post 1964ம் ஆண்டு புயலில் அழிந்த தனுஷ்கோடியில் அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Anjali ,Dhanushkodi ,Rameswaram ,Bagh Strait ,
× RELATED தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை…கடலில் நீந்திய வாண்டுகள்