×

கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை

சென்னை: தென் மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், இணைச் சீருடைகள் வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்கள் வரலாறு காணாத மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

பொதுமக்கள் பல பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், பள்ளி மாணவ, மாணவியரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் மழைநீரில் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த மாவட்டங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பிறகு கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளையும், மாணவர்களையும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்பேரில், இந்த நான்கு மாவட்டங்களில் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிக்காதவகையில் பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப் பைகள், கூடுதலாக இரண்டு இணைச் சீருடைகள் ஆகியவை அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது.

* பொதுமக்கள் பல பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், பள்ளி மாணவ, மாணவியரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

The post கன மழையால் பாதிக்கப்பட்ட நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, மாணவர்களுக்கு புத்தகங்கள், சீருடை appeared first on Dinakaran.

Tags : Nelli ,Chennai ,Nellai ,Thoothukudi ,
× RELATED நெல்லையில் கட்டுக்கடங்காத கூட்டம்;...