×
Saravana Stores

ஐஎன்எஸ் இம்பால் ஏவுகணை அழிப்பு கப்பல் இந்திய கடற்படையில் நாளை இணைப்பு

புதுடெல்லி: மும்பையில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஏவுகணை அழிப்பு கப்பல் நாளை இந்திய கடற்படையில் இணைக்கப்பட உள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் இம்பால் ஏவுகணை அழிப்பு போர் கப்பல் கைடட் மிசைல் டெஸ்ட்ராயர் என்ற வகையை சேர்ந்த அதிநவீன போர்க்கப்பல்களில் ஒன்றாகும். இந்திய கடற்படையின் போர்கப்பல் பணியகம் வடிவமைத்து மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும்தளத்தில் கட்டமைக்கப்பட்டது. ஐஎன்எஸ் இம்பால் இந்திய கடற்படையின் 3வது ஏவுகணை அழிப்பான் போர் கப்பல்.

சுமார் 7,400 எடை, 164 மீட்டர் நீளம் கொண்ட ஐஎன்எஸ் இம்பால் மணிக்கு சுமார் 56 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும். இது தரையிலிருந்து வான்வழி ஏவுகணைகள், கப்பல் எதிர்ப்பு உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சார்கள் கொண்ட சக்தி வாய்ந்த போர்கப்பல். மேலும் ஐஎன்எஸ் இம்பால் ஏவுகணை அழிப்பு போர்கப்பலில் தரையில் இருந்து வான்வழி தாக்குதலை நடத்தும் ஏவுகணைகள், பிரமோஸ் வானிலிருந்து வான்வழி இலக்கை தாக்கும் ஏவுகணைகள், உள்நாட்டு டார்பிடோ குழாய் ஏவுகணைகள், உள்நாட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட் லாஞ்சர்கள், மற்றும் 76மிமீ சூப்பர் ரேபிட் கன் மவுன்ட் ஆகியவை உள்ளன. ஐஎன்எஸ் இம்பால் கப்பல் பல்வேறு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இதையடுத்து நாளை மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெறும் விழாவில் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

The post ஐஎன்எஸ் இம்பால் ஏவுகணை அழிப்பு கப்பல் இந்திய கடற்படையில் நாளை இணைப்பு appeared first on Dinakaran.

Tags : Indian Navy ,New Delhi ,Mumbai ,INS ,Dinakaran ,
× RELATED அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க...