×

ஆக்மென்டட் ரியாலிட்டி பயன்படுத்தி இந்தியாவில் முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை

சென்னை: ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் முதல் முறையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அப்போலோ மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். சென்னையை சேர்ந்த 70 வயதுடைய முதியவர் மூட்டு தேய்மானம் காரணமாக நீண்ட நாட்களாக வலியால் அவதிப்பட்டு உள்ளார். வலி தொடர்ந்து அதிகரித்த காரணத்தினால் அப்போலோ எலும்பியல் மருத்துவர்கள் டாக்டர் மதன் மோகன் ரெட்டி மற்றும் டாக்டர் கார்த்திக் ரெட்டி சந்தித்து ஆலோசனை பெற்று உள்ளார்.

அந்த முதியவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என முடிவு செய்தனர். மேலும் ஆக்மென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாகவும் விரைவாகவும் இந்த மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டு அந்த முதியவரின் உறவினர்களிடம் அனுமதி பெற்று வெற்றிகரமாக ஆக்மென்டட் ரியாலிட்டி பயன்படுத்தி முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து முடித்தனர். ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) தொழில்நுட்பம் என்பது அறுவை சிகிச்சை நிபுணர்கள் ஏஆர் கண்ணாடிகளைப் பயன்படுத்தி, அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளின் முட்டியின் விரிவான தகவல்களை கண்டு, முட்டின் மிக துல்லியமான பகுதிகளில் சிகிச்சை அளிக்கலாம்.

இது தொடர்பாக டாக்டர் மதன் மோகன் ரெட்டி கூறியதாவது:ஏஆர்- உதவியுடன் முதல் மொத்த முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. வழக்கமான அறுவை சிகிச்சை முறை மற்றும் உள் அறுவை சிகிச்சைமுறையை விட, ஆக்மென்டட் ரியாலிட்டி மூலம் செய்யபடும் அறுவை சிகிச்சை பல நன்மைகளை கொண்டிருக்கிறது. இந்த தொழில்நுட்பம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது டிஜிட்டல் மேலடுக்குகள் மூலம் வழிகாட்டுகிறது. ஏஆர் தொழில்நுட்ப அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் நோயாளிகள் இருவருக்கும் அறுவை சிகிச்சை அனுபவத்தில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஏஆர் தொழில்நுட்ப பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்யும் போது சிறு சிக்கலையும் கண்டறிய முடியும் எனவே அறுவை சிகிச்சையை எளிதாக்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆக்மென்டட் ரியாலிட்டி பயன்படுத்தி இந்தியாவில் முதல் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: அப்போலோ மருத்துவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Apollo ,Chennai ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் 10 லட்சம் குழந்தைகளுக்கு...