×

காஷ்மீரில் 3 உள்ளூர்வாசிகள் மர்ம சாவு குறித்து ராணுவம் விசாரணை

புதுடெல்லி: காஷ்மீரில் 3 உள்ளூர்வாசிகளின் மர்ம சாவு குறித்து ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கடந்த 21ம் தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையினர் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். இதுதொடர்பாக உள்ளூர் மக்கள் 8 பேரை ராணுவம் விசாரணைக்காக அழைத்துச் சென்றது. அதில் 3 பேர் கடந்த 22ம் தேதி சடலமாக மீட்கப்பட்டனர். சாரணையின்போது இவர்கள் அடித்துக் கொல்லப்பட்டமாக இறந்தவர்ளின் உறவினர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். றந்த 3 பேரின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கி, கருணை பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராணுவம் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து காஷ்மீர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் தரப்படும் என்றும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வு பெற்ற எஸ்பி மசூதியில் சுட்டு கொலை: மு- காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் உரி பகுதியை அடுத்து உள்ளது காண்ட்முல்லா. இந்த பகுதியில் ஓய்வுபெற்ற எஸ்பி முகமது ஷபி மிர்(72) வசித்து வந்தார். நேற்று அதிகாலை அங்குள்ள மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தீவிரவாதிகள் அவரை கொடூரமாக சுட்டு கொலை செய்தனர். இது குறித்து காவல் துறையினர் கூறுகையில்,முகமது ஷபி மிர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். காஷ்மீரிலேயே மிகவும் அமைதியான பகுதி காண்ட்முல்லா. கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் எந்த விதமாக வன்முறை சம்பவங்களும், தாக்குதல்களும் நடைபெற்றது இல்லை. இந்த பகுதியில் நடந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது” என்றனர்.

The post காஷ்மீரில் 3 உள்ளூர்வாசிகள் மர்ம சாவு குறித்து ராணுவம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Army ,Kashmir ,New Delhi ,Shmeer's Poonch district ,Dinakaran ,
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...