×

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ சுனில் கேதார் தகுதி நீக்கம்

நாக்பூர்: நாக்பூரில் உள்ள சனோர் சட்டமன்ற தொகுதியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த சுனில் கேதார். உத்தவ் தாக்கரே ஆட்சியில் பால் வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சராக இருந்தவர். நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவராகவும் இருந்துள்ளார். வங்கித் தலைவராக இருந்தபோது 2002ம் ஆண்டில் நடந்த ரூ.125 கோடி முறைகேடு தொடர்பாக கேதார், வங்கியின் அப்போதைய பொது மேலாளர் அசோக் சவுத்ரி உட்பட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நாக்பூர் கூடுதல் தலைமை ஜூடிஷியல் மாஜிஸ்திரேட் கோர்ட், கேதார், அசோக் சவுத்ரி உட்பட 6 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து சுனில் கேதாரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

The post ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ சுனில் கேதார் தகுதி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Congress ,MLA Sunil Kedar ,Nagpur ,Sanor assembly ,Nagpur.… ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...