×

இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும்: ஒன்றிய அமைச்சர் கடிதம்

டெல்லி: மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷண் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷண் சரண் சிங், மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவரது விசுவாசியான சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

இதையடுத்து, கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக், மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மேலும் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா, பத்மஸ்ரீ விருதை ஒன்றிய அரசிடம் திரும்ப ஒப்படைத்தார். இந்த சூழலில், புதிதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

புதிதாக தேர்வான மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், புதிதாக தேர்வான நிர்வாகத்தில், முந்தைய நிர்வாகத்தினரின் தலையீடு உள்ளது என்றும், இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மல்யுத்த சங்கத்தை நிர்வகிக்க, தற்காலிக நிர்வாக குழுவை அமைக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

The post இந்திய மல்யுத்த சங்கத்தில் தொடர்ச்சியாக நடந்துவரும் சர்ச்சைகளுக்கு முடிவு காண வேண்டும்: ஒன்றிய அமைச்சர் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Indian Wrestling Association ,Union Minister ,Delhi ,Brij Bhushan Saran Singh ,Dinakaran ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...