×

தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷன் விலகல் ஏன்?

மும்பை: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் நாளை மறுநாள் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் இஷான் கிஷன் திடீரென அணியில் இருந்து விலகினார். இதனால் அவருக்கு பதிலாக கே.எஸ். பரத் அணியில் சேர்க்கப்பட்டார். சொந்த காரணங்களுக்காக இஷான் கிஷன் அணியில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டது.

இஷான் கிஷன் கடந்த ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணியில் பயணித்து வருகிறார். உலககோப்பையில் முதல் 2 போட்டி மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி.20 தொடரில் பங்கேற்றார். இந்திய அணியுடன் கடந்த ஒரு வருடமாக இடைவிடாமல் பயணம் செய்து வருவதால் தனக்கு மன சோர்வு இருப்பதாகவும், கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு பெற விரும்புவதாகவும் அவர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

The post தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இஷான் கிஷன் விலகல் ஏன்? appeared first on Dinakaran.

Tags : Ishan Kishan ,South Africa ,MUMBAI ,India ,Centurion ,Dinakaran ,
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...