×

புரோ கபடி லீக்; யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ் பெங்களூரு-தெலுங்கு மோதல்

சென்னை: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் தொடர் போட்டிகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 36வது லீக போட்டியில் தமிழ்தலைவாஸ் 24-25 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியிடம் போராடி தோல்வி அடைந்தது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில், குஜராத் ஜெயன்ட்ஸ்-உ.பி.யோத்தா அணிகள் மோதின.

விறுவிறுப்புடன் நடந்த இந்த போட்டியில், முதல் பாதியில் 19- 14 என உ.பி. முன்னிலை வகித்தது. ஆனால் 2வது பாதியில் குஜராத் ஆதிக்கம் செலுத்தி 24 புள்ளி குவித்தது. ஆனால் உபி.யால் 11 புள்ளி தான் எடுக்க முடிந்தது. இதனால் 38-30 என்ற புள்ளி கணக்கில் குஜராத் 4வது வெற்றியை ருசித்தது. குஜராத் ரைடர் ராகேஷ் அதிகபட்சமாக 14 புள்ளி எடுத்தார். உபி. 4வது தோல்வியை சந்தித்தது. இன்று இரவு 8 மணிக்கு யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ், இரவு 9 மணிக்கு பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

The post புரோ கபடி லீக்; யு மும்பா-பெங்கால் வாரியர்ஸ் பெங்களூரு-தெலுங்கு மோதல் appeared first on Dinakaran.

Tags : Pro ,Kabaddi League ,U Mumba ,Bengal Warriors Bengaluru ,Telugu Clash ,Chennai ,10th ,Pro Kabaddi League ,U Mumba- ,Dinakaran ,
× RELATED சொத்து பிரச்சனை!: திருப்பூர் மாவட்டம்...