×

துப்பாக்கி தயாரித்த 3 பேர் கும்பல் கைது: 3 மாநில போலீஸ் அதிரடி

கோபால்பூர்: ஒடிசாவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் தயாரித்த மூன்று பேர் கும்பலை மூன்று மாநில கூட்டுக்குழு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஒடிசா மாநில அதிரடிப் படை, கொல்கத்தா காவல்துறை, பீகார் காவல்துறை ஒன்றிணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், கோபால்பூரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை தயாரித்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தர்மேந்திர குமார் என்கிற தாரோ (30), அபிஷேக் குமார் என்கிற சோட்டு (25), விகாஸ்க் குமார் என்கிற ராஜா (23) ஆகிய மூன்று பேரை கூட்டு நடவடிக்கை குழு கைது செய்துள்ளது.

இதுகுறித்து மூத்த ேபாலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்து மூன்று சிங்கிள்-ஷாட் துப்பாக்கிகள், ஒரு லேத் மெஷின், ஒரு கிரைண்டிங் இயந்திரம், ஒரு டிரிலிங் இயந்திரம், துப்பாக்கிகள் மற்றும் இரும்பு கம்பிகள் (மூலப் பொருட்கள்) தயாரிக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் இயந்திரங்களை மீட்ேடாம். கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றனர்.

The post துப்பாக்கி தயாரித்த 3 பேர் கும்பல் கைது: 3 மாநில போலீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Gopalpur ,Odisha ,
× RELATED ஒடிசா சிறப்பு திட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன் ராஜினாமா