×

தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணி இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 35 காவல் உதவி ஆணையர்களை பணி இடமாற்றம் செய்து காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை: அடையாறு காவல் உதவி ஆணையராக இருந்த நெல்சன் தாம்பரம் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருள் செல்வன் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையராகவும், திருவள்ளூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்தின் டிஎஸ்பியாக இருந்த இளங்கோவன் சென்னை திருவொற்றியூர் காவல் உதவி ஆணையராகவும், ஆவடி பட்டாபிராம் காவல் உதவி ஆணையராக இருந்த சதாசிவம் வண்ணாரப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும், தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராக இருந்த முருகேசன் சென்னை அடையாறு காவல் உதவி ஆணையராகவும், தாம்பரம் காவல் உதவி ஆணையராக இருந்த சீனிவாசன் சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையராக இருந்த மோகன் கடலூர் திட்டக்குடி டிஎஸ்பியாகவும், சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையராக இருந்த கிறிஸ்டின் ஜெயசீலி தாம்பரம் சேலையூர் காவல் உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜி.கே.கண்ணன் தமிழக காவல்துறை தொலைத்தொடர்பு பிரிவு டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த சுபகுமார் மதுரை நகர திடீர் நகர் காவல் உதவி ஆணையராகவும், திருப்பூர் மாவட்ட ஆவண குற்ற ஆவண காப்பக பிரிவின் டிஎஸ்பியாக இருந்த விஜயகுமார் நாமக்கல் மாவட்ட ராசிபுரம் காவல் டிஎஸ்பியாகவும், மயிலாடுதுறை மாவட்ட சீர்காழி காவல் டிஎஸ்பியாக இருந்த அகஸ்டின் ஜோசுவா லானெச் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் டிஎஸ்பியாகவும், தேனி மாவட்ட பெரியகுளம் காவல் டிஎஸ்பியாக இருந்த கீதா தமிழக காவல்துறை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி டவுன் காவல் உதவி ஆணையராக இருந்த சுப்பையா திண்டுக்கல் மாவட்ட பழனி காவல் டிஎஸ்பியாகவும், திருநெல்வேலி நகர குற்ற ஆவண காப்பகப் பிரிவின் காவல் உதவி ஆணையராக இருந்த சரவணன் ஈரோடு மாவட்ட சத்தியமங்கலம் காவல் டிஎஸ்பியாகவும், தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளம் காவல் டிஎஸ்பியாக இருந்த ஜெயச்சந்திரன் கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் டிஎஸ்பியாகவும், முதல்வர் பாதுகாப்பு பிரிவில் டிஎஸ்பியாக இருந்த கந்தவேலு சென்னை காவல்துறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் சரக காவல் பயிற்சி பிரிவு டிஎஸ்பி சுரேஷ் தமிழ்நாடு போலீஸ் அகாடமி போலீஸ் டிஎஸ்பியாகவும், நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல் டிஎஸ்பியாக இருந்த சிவக்குமார் திருப்பூர் மாவட்ட அவினாசி காவல் டிஎஸ்பியாகவும், கடலூர் மாவட்ட பண்ருட்டி 10வது பட்டாலியன் உதவி கமாண்டண்டாக இருந்த சபியுல்லா கடலூர் மாவட்ட நெய்வேலி காவல் டிஎஸ்பியாகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த தீபு திருநெல்வேலி நகர உளவுப்பிரிவு உதவி ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவிக்குமரன் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய பிரிவின் டிஎஸ்பியாகவும், செல்வசேகர் தாம்பரம் காவல் ஆணையரக பயிற்சி பிரிவு மையத்தின் உதவி ஆணையராகவும், ஆல்டிரின் தாம்பரம் காவல் ஆணையரக நலப்பிரிவின் உதவி ஆணையராகவும், கார்த்திக் முதல்வர் பாதுகாப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், அன்பரசன் தஞ்சாவூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், பூரணி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் டிஎஸ்பியாகவும், தையல்நாயகி கோவை மாவட்ட மின்பகிர்மான கழக விஜிலென்ஸ் பிரிவு டிஎஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராக இருந்த ரவி தாம்பரம் காவல் ஆணையரக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாவட்ட பேரூர் டிஸ்பியாக இருந்த ராஜபாண்டியன் தாம்பரம் மணிமங்கலம் காவல் உதவி ஆணையராகவும், திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த தனுசியா தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை காவல்துறை (கிழக்கு) மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையராக இருந்த மகீமைவீரன் ஆவடி காவல் ஆணையரக மணலி காவல் உதவி ஆணையராகவும் பணியிடமாற்றம்.

மேலும், கோவை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டிஎஸ்பியாக இருந்த கிருஷ்ணன் தமிழ்நாடு காவல்துறை சைபர் கிரைம் பிரிவு டிஎஸ்பியாக இருந்த உவ பிரியா, தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த மனோகரன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழகம் முழுவதும் 35 டிஎஸ்பிக்கள் பணி இடமாற்றம்: டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,TGB ,Jival ,Chennai ,Sankar Jival ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மேல்முறையீடு