சென்னை: தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் – சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 17.09.1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார்.
இன்று அவரது 50வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி தலைவர்கள் மலரும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தந்தை பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பண்பாட்டு ரீதியாக ஒடுக்கப்பட்டு, அடையாளங்கள் சிதைக்கப்பட்ட தமிழினத்தின் சுயமரியாதையைத் தட்டியெழுப்பி, சமத்துவ நெறியே தமிழர் நெறி எனப் பகுத்தறிவுப் பாதையில் நம்மையெல்லாம் நடைபோடச் செய்த தந்தை பெரியாரின் புகழைப் போற்றுவோம்.
“கணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு எதிர்பார்க்கும் தலைவர் பெரியார்” என்று பாவேந்தர் பாடியதைக் காலந்தோறும் முழங்குவோம்! வீறுகொண்டு எழுந்த நாம் ஒருபோதும் வீழமாட்டோம் எனச் சூளுரைத்து வீணர்களை வீழ்த்துவோம்
The post பெரியாரின் 50ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.