×

இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம்

தூத்துக்குடி: மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. உடனடியாக சேதம் அடைந்த அரிசி மூடைகளை அகற்றி நடவடிக்கை எடுக்க, இந்திய உணவுக் கழக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

வரலாறு காணாத மழையால் தூத்துக்குடி மாவட்டமே சின்னாபின்னமாக சிதைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரம் மற்றும் தாமிரபரணி கரையோர பகுதிகள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. மாவட்டம் முழுவதும் பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதி பெய்த அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கயத்தாறு, கடம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் குளம் வேகமாக நிரம்பியது. இதனால் குளத்தில் உள்ள 24 கண் மதகு திறக்கப்பட்டது. இதனால் உப்பாற்று ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆனாலும் கோரம்பள்ளம் குளத்தில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குளத்தின் தண்ணீர் தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள பாலம் வழியாக பாய்ந்து ஓடியது.

இந்நிலையில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக, தூத்துக்குடி பாளையங்கோட்டை நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ள இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது.

The post இந்திய உணவுக் கழக பாதுகாப்பு குடோனில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 8000 டன் அரிசி மற்றும் 500 டன் கோதுமை நீரில் மூழ்கி சேதம் appeared first on Dinakaran.

Tags : Indian Food ,Safety ,Kudon ,Thoothukudi ,Indian Food Society Safety Kudon ,Thoothukudi Palayangota Highway ,Indian Food Safety Kudon ,Dinakaran ,
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...