×

நகைச்சுவை நடிகர் போண்டா மணி(60) உடல்நகுறைவால் சென்னையில் காலமானார்.

சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணி(60) உடல்நகுறைவால் சென்னையில் காலமானார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த நடிகர் போண்டா மணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணி இறந்ததாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். குலேஷன், சச்சின், வேலாயுதம், உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் போண்டா மணி நடித்துள்ளார். வடிவேலு, விவேக் உள்ளிட்ட நடிகர்களுடன் பல படங்களில் போண்டாமணி நகைச்சுவை காட்சியில் நடித்துள்ளார்.

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகர் போண்டா மணி, 1991ம் ஆண்டு வெளியான நடிகர் பாக்யராஜின் ‘பவுனு பவுனுதான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து ‘சுந்தரா டிராவல்ஸ்’, ‘மருதமலை’, ‘வின்னர்’, ‘வேலாயுதம்’, ‘ஜில்லா’ உள்ளிட்ட 150க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

சென்னை பொழிச்சலூரில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் நேற்று (23.12.2023) இரவு 10 மணிக்கு அவர் தனது வீட்டில் திடீரென்று மயங்கி உள்ளார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணியின் மறைவு தமிழ் சினிமா ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. வின்னர், மருதமலை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் இவர் பணியாற்றி உள்ளார். குறிப்பாக, ‘அடிச்சும் கூட கேட்பாங்க அப்பவும் சொல்லிடாதீங்க’, ‘தக்காளிச் சட்னிய மூஞ்சில கொட்டி வச்சு இருக்கீங்க’, ‘நீங்க சீப்பா போட்ட பிளான சீப்பாலயே முடிச்சேன் பாத்தீங்களா’ என நடிகர் வடிவேலுவுடன் அவர் பேசிய வசனங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன.

 

The post நகைச்சுவை நடிகர் போண்டா மணி(60) உடல்நகுறைவால் சென்னையில் காலமானார். appeared first on Dinakaran.

Tags : Comedian Ponta Mani ,Chennai ,Ponda Mani ,Comedian ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...