×

உரிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு கொள்ளிடம் அருகே அளக்குடியில் பொதுக்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா?

கொள்ளிடம்,டிச.24: கொள்ளிடம் அருகே அளக்குடியில் பொதுக்குளம் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் பொதுக்குளம் உள்ளது. இங்குள்ள குளங்களில் இந்த பொது குளம் மிகவும் முக்கியமான குளமாகும். கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு இதில் அப்பகூதியைச் சேர்ந்த கிராம மக்கள் நீராடி மகிழ்ந்தனர். சுற்றுப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கும் தாகத்திற்கு தண்ணீர் அளித்து வரும் குளமாகவும் இருந்து வந்தது. சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் தற்போது மிகவும் சுருங்கியுள்ளது. இந்த குளத்துக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து தேங்குவதற்கும், தேங்கிய நீர் வெளியேறி செல்வதற்கும் தனித்தனியாக வாய்க்கால் வசதி அமைக்கப்பட்டிருந்தன.

காலப்போக்கில் இந்த வாய்க்கால்கள் அடைபட்டு மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தேங்கியிருக்கும் நிலை ஏற்படுகிறது. மழைநீர் எங்கும் வெளியேறிச் செல்ல முடியாமல் ஒரே இடத்தில் தேங்கி கிடப்பதால் இதில் உள்ள தண்ணீர் மாசுபடுவதுடன் பல ஆயிரக்கணக்கான கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் இருந்து வருகிறது. இந்த குளம் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையிலும் அமைந்துள்ளது. எனவே அப்பகுதி கிராம மக்கள் நலன் கருதி இந்த பொது குளத்தை தூர்வாரி அகலப்படுத்தியும் ஆழப்படுத்தியும் தண்ணீர் வந்து செல்ல பயன்பட்ட வாய்க்கால்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து அகற்றியும் குளத்தை பழைய குளம்போல மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post உரிய விலை கிடைக்குமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு கொள்ளிடம் அருகே அளக்குடியில் பொதுக்குளம் தூர்வாரி சீரமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Alakudi ,Kollidam ,Kollidum ,Mayiladuthurai ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் உளுந்து, பயறு சாகுபடி பரப்பளவு குறைந்தது