×

கம்பம் நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

கூடலூர்/கம்பம், டிச. 24: கம்பம் நகராட்சி சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்கள் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, கம்பம் நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்மன்றத்தின் மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமையில், நகராட்சி பொறியாளர் அய்யனார், உதவி பொறியாளர் சந்தோஷ்குமார், மேலாளர் ஜெயந்தி, சுகாதார அலுவலர் அரசக்குமார், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியம் முன்னிலையில் நடைபெற்றது.நிகழ்ச்சியில், நகர் மன்ற உறுப்பினர்கள் சுல்தான் சல்மான் பார்ஸி, வசந்தி, வி.ரோஜாரமணி, அபிராமி, அன்புக்குமாரி மற்றும் நகராட்சி அனைத்து துறை அதிகாரிகள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post கம்பம் நகராட்சி சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kampam Municipality ,Cuddalore ,Pambam ,Dinakaran ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை