×

வீரபாண்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

தேனி, டிச. 24: தேனி அருகே வீரபாண்டியில், தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், தேனி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்கள் ரத்தினசபாபதி, சக்கரவர்த்தி, போடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அய்யப்பன் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தின்போது, தங்கதமிழ்செல்வன் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றி குறித்தும், வாக்காளர்பட்டியலை சரிபார்ப்பது குறித்தும் விளக்கி பேசினார். இக்கூட்டத்தில், தேனி வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்லப்பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் திருக்கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post வீரபாண்டியில் திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Veerapandi ,Theni ,Weerapandi ,Theni North District DMK ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே இட்லி சுட பார்க்கிறார் மோடி: போட்டு தாக்கும் கருணாஸ்