×

உசிலம்பட்டி சந்தை பகுதியில் தேங்கும் கழிவு நீர்

உசிலம்பட்டி, டிச. 24: உசிலம்பட்டியில் அமைந்துளள் சந்தை பகுதி, ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமானது. இந்த பகுதியில் உள்ள நூலகம் அருகே சாலை முழுவதும் கழிவு நீர் தேங்கிக்கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கிடையே இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக கழிவு நீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து நோய் பரவும் சூழல் ஏற்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘கடைகளில் வீணாக கிடக்கும் டயர் உள்ளிட்ட பொருட்களில் தண்ணீர் தேங்குவதாக கூறி அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், இதுபோல் பொது இடமான சாலையில் தேங்கி கிடக்கும் கழிவுநீரால் பல்வேறு பாதிப்புகள் உள்ளது என்பதை உணர்ந்து அவர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என்றனர்.

The post உசிலம்பட்டி சந்தை பகுதியில் தேங்கும் கழிவு நீர் appeared first on Dinakaran.

Tags : Usilampati ,Usilampatty ,Uradachi Union ,Usilampati Market Area ,Dinakaran ,
× RELATED காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு