×

குனியமுத்தூரில் டிச.27ல் மின்தடை

கோவை, டிச.24: கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் வரும் 27ம் தேதி நடைபெறவுள்ளது. ஆகையால், அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது. அதன் விபரம்: குனியமுத்தூர், புட்டுவிக்கி, இடையர்பாளையம், சுந்தராபுரம் ஒரு பகுதி, பி.கே புதூர், கோவைப்புதூர், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூர் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என கோவை மின்பகிர்மான செயற்பொறியாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

அதேபோல, கோவை ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்தில் வரும் 28ம் தேதி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆகையால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூர் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம் ஒரு பகுதி, உக்கிலிபாளையம், பிரிமியர் நகர், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி, செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

The post குனியமுத்தூரில் டிச.27ல் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Kuniyamuthur ,Coimbatore ,Dinakaran ,
× RELATED கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு...