×

ரோட்டவேட்டரில் சிக்கி தந்தை கண் எதிரே மகன் பலி: போலீசார் விசாரணை

வந்தவாசி,டிச.24: வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் டிராக்டரில் ஏர் உழுதபோது ரோட்டவேட்டரில் சிக்கி தந்தை கண் எதிரே மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வந்தவாசி அடுத்த வெண்குன்றம் பண்டாரந்ேதாப்பு பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி(35), விவசாயி. இவருக்கு ஜெயலட்சுமி(31) என்ற மனைவியும், தஸ்வந்த்(6) என்ற மகன், யுவபாரதி(2) என்ற மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று தண்டபாணி அதே பகுதியில் உள்ள தனது விவாசய நிலத்தில் மகன் தஸ்வந்த் உடன் உளுந்து விதைப்பதற்காக டிராக்டரில் ஏர் உழுது கொண்டு இருந்தாரம்.

அப்போது டிராக்டரில் பக்கவாட்டில் அமர்ந்து இருந்த தஸ்வந்த் திடீரென என தவறி கீழே விழுந்துள்ளான். அதில் பின்பகுதியில் உள்ள ரோட்டவேட்டரில் சிக்கி படுகாயம் அடைந்தான். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தண்டபாணி உடனடியாக சிறுவனை மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், தஸ்வந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

The post ரோட்டவேட்டரில் சிக்கி தந்தை கண் எதிரே மகன் பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Venkunram ,Dinakaran ,
× RELATED வந்தவாசி பகுதியில் பெய்த இடியுடன் கூடிய கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி