×

உயர் கல்வி பாடத்திட்டத்தில் தேர்தல் கல்வி யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த நவம்பர் 2ம் தேதி மத்திய கல்வி அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் தேர்தலில் புதிய வாக்காளர்கள் சிறந்த பங்களிப்பை செலுத்துவதற்கு வழிகாட்டும் வகையில் வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் கல்வியறிவு தொடர்பானவை பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இதற்கான கிரெடிட் மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். வாக்காளர் அட்டை பெறுவது தொடர்பான அனைத்து தகவல்களும் பாடத்திட்டத்தில் இடம்பெறும். இதன் மூலம் நல்ல மாற்றங்களை சமூகத்தில் கொண்டு வர வேண்டும்.

The post உயர் கல்வி பாடத்திட்டத்தில் தேர்தல் கல்வி யுஜிசி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : UGC ,Chennai ,University Grants Commission ,Manish R. Joshi ,University Vice-Chancellors ,
× RELATED 10 நாள் எம்பிஏ படிப்பில் சேர வேண்டாம்: யூஜிசி