×

ஊழல் நாற்காலிக்கு அருகில் உட்கார பிடிக்காது மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு

சித்ரதுர்கா: மக்களவைக்கு இன்னும் சில மாதங்களில் பொது தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாஜ சார்பில் கர்நாடகாவில் இருந்து எம்பியாக தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் டி.வி.சதானந்தகவுடா (பெங்களூரு வடக்கு), வி.சீனிவாசபிரசாத் (சாம்ராஜ்நகர்), எம்பிக்கள் சிவகுமார் உதாசி (ஹாவேரி), ஜி.எஸ்.பசவராஜ் (துமகூரு) ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து விலகி முழுமையாக ஓய்வெடுத்து கொள்வதாக அறிவித்துள்ளனர். தற்போது 5வது நபராக ஒன்றிய அமைச்சர் நாராயணசாமியும் தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் ஒன்றிய இணை அமைச்சர் நாராயணசாமி கூறும்போது,’ நான், அரசியலில் இருந்து ஒதுங்குவது பற்றி யோசித்தேன். இந்த ஊழல் அமைப்பில் தொடரும் அரசியல்வாதி நான் இல்லை. ஊழல் நாற்காலிக்கு அருகில் உட்காருவது எனக்கு பிடிக்காது. அரசியலில் நடக்கும் ஊழல்கள் என் கவனத்துக்கு வந்ததும் இந்த முடிவை எடுத்தேன். இது வரவிருக்கும் மக்களவை தேர்தலில் மட்டும் அல்ல. எதிர்கால அரசியலில் இருந்து விலகி இருப்போம் என முடிவெடுத்துள்ளேன்’என்றார்.

The post ஊழல் நாற்காலிக்கு அருகில் உட்கார பிடிக்காது மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ஒன்றிய அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Chitradurga ,Lok ,Sabha ,BJP ,Karnataka ,
× RELATED 6ம் கட்ட மக்களவை தேர்தலில் 866...