×

சாத்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் மைசூர் ரயில் தப்பியது

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கீ மேன் பாக்கியராஜ், தண்டவாளங்களை கண்காணிப்பு செய்து வந்தார். அப்போது சின்ன ஓடைப்பட்டி அருகே சாத்தூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் தண்டவாளத்தில் விரிசல் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். அப்போது மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில், விரிசல் ஏற்பட்டுள்ள தண்டவாளத்தில் வரவே, தன்னிடம் இருந்த சிவப்புக்கொடியை காட்டி நிறுத்தியுள்ளார்.

அதன்பின் அவர் சாத்தூர் ரயில் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் வந்த ரயில்வே பணியாளர்கள் தண்டவாளத்தில் இருந்த விரிசலை சரி செய்தனர். பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக தூத்துக்குடிக்கு மைசூர் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால் தாம்பரம் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சாத்தூர் ரயில் நிலையத்தில் 40 நிமிடங்கள் நின்று தாமதமாக சென்றது.

The post சாத்தூர் அருகே தண்டவாளத்தில் விரிசல் மைசூர் ரயில் தப்பியது appeared first on Dinakaran.

Tags : Mysore ,Chatur ,Chatur railway ,Virudhunagar district ,Pakyaraj ,
× RELATED மைசூரில் திருடப்பட்ட 7 லேப்டாப், 2...