×

தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்சுக்கு டீசல் போடுவதில் முறைகேடு: டிரைவர் உட்பட 2 பேர் கைது

திருத்தணி: தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்சுக்கு டீசல் போடுவதில் முறைகேடு செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருத்தணி, அரக்கோணம் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லவும் அதேபோன்று இந்த மருத்துவமனைக்கு சிகிச்சை வருபவர்களை அழைத்து வரவும் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆம்புலன்ஸ் டிரைவர் காளிதாஸ்(47) என்பவர் தினமும் வாகனத்துக்கு டீசல் குறைவாக போட்டுவிட்டு கூடுதல் டீசல் போட்டு விட்டதாக கூறி போலியான பில்லை மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிவந்துள்ளதாக தெரிகிறது.

இந்தநிலையில் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சந்தேகம் ஏற்பட்டதால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி, குற்றப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குபதிவு செய்து டிரைவர் காளிதாசை பிடித்து விசாரணை செய்தபோது 100 முதல் 150 லிட்டர் டீசல் போட்டுவிட்டு 200 லிட்டர் டீசல் போடுவதாக போலி பில் வாங்கி நிர்வாகத்திடம் கொடுத்துள்ளது தெரியவந்தது. மேலும் இதற்கு உடந்தையாக பெட்ரோல் பங்க் ஊழியர் ரஞ்சித்குமார்(32) இருந்துள்ளார். இதையடுத்து டிரைவர், ஊழியர் ஆகியோரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்சுக்கு டீசல் போடுவதில் முறைகேடு: டிரைவர் உட்பட 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruthani ,Thiruthani, Arakkonam Road ,
× RELATED திருத்தணியில் சாலை விரிவாக்கப்பணிகள்...