×

தமாகா சார்பில் கிறிஸ்துமஸ் விழா: ஜி.கே.வாசன் நல உதவி வழங்கினார்


சென்னை: தமாகா சார்பில் சென்னை சாந்தோம் கதீட்ரல் ஆரம்பப் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு, வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பிஜூ சாக்கோ தலைமை தாங்கினார். இதில், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கேக் வெட்டி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகளை வழங்கினார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், சென்னை மயிலை முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, மாநில மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், கொள்கை பரப்பு செயலாளர் பொன்.வில்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘இனிவரும் நாட்களிலும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெறும்.

வலிமையான பாரதத்தை உருவாக்கும் பணியில் த.மா.கா. சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் விழா சிறுபான்மை மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் சிறுபான்மை மக்களுக்கான திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். அதற்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம்’ என்றார். நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் ஜவஹர் பாபு, வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, சிறுபான்மை அணி தலைவர் அப்பாஸ், மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், துணைத் தலைவி பானு லாரன்ஸ், மாவட்டத் தலைவர்கள் சைதை மனோகரன், முனவர் பாஷா, அருண்குமார், ரவிச்சந்திரன், பாலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post தமாகா சார்பில் கிறிஸ்துமஸ் விழா: ஜி.கே.வாசன் நல உதவி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Tamaka ,GK Vasan ,CHENNAI ,Santhome Cathedral Primary School ,Tamaga ,North Chennai East ,Christmas Festival ,Dinakaran ,
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களை முறையாக...